மேலும் செய்திகள்
ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
15-Feb-2025
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, வருவாய் அலுவலர் வெங்கடாஜலபதியை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காரைக்குடி கிளைத்தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவா ஆனந்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சுந்தரம், மாவட்ட இணை செயலாளர் சிவா, பொதுப்பணித்துறை ஆட்சிப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கோடை மலைக்குமரன், தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை ஆசிரியர் கழக மாவட்ட அமைப்பு செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்க மாவட்ட பொருளாளர் முத்தையா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.
15-Feb-2025