மேலும் செய்திகள்
51 பயனாளிக்கு ரூ.1.18 கோடி நலத்திட்டம்
22-Aug-2024
சிவகங்கை: சிவகங்கையில் 704 மகளிர் குழுக்களுக்கு ரூ.65.38 கோடி மதிப்பிலான கடனை அமைச்சர்பெரியகருப்பன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா வரவேற்றார். தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், மாவட்ட அளவில் 704 மகளிர் குழுக்களுக்கு, ரூ.65.38 கோடி மதிப்பிலான வங்கி கடன் உத்தரவை அமைச்சர் வழங்கினார். உதவி திட்ட அலுவலர் தேன்ராஜ் நன்றி கூறினார். மகளிர் குழுவினர் அமைத்த கண்காட்சியை பார்வையிட்டனர்.
22-Aug-2024