மேலும் செய்திகள்
போந்துாரில் புது கழிப்பறை அமைக்க வேண்டுகோள்
10-Feb-2025
இளையான்குடி; இளையான்குடி அருகே கலங்காதன் கோட்டை சந்தை கட்டடத்தில் கடந்த ஒரு வருடமாக கழிப்பறை மூடப்பட்டுள்ளதால் வியாபாரிகள், கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கலங்காதன் கோட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு இளையான்குடி, கலங்காதன் கோட்டை,ஒச்சந்தட்டு, துகவூர், சின்னதுகவூர் மற்றும் 30க்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.வியாபாரிகள் மற்றும் கிராம மக்களின் வசதிக்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தை வளாக பகுதியில் கழிப்பறை கட்டப்பட்டன. கட்டிய நாள் முதலே இக்கழிப்பறை வளாகம் திறக்கப்படாமல் உள்ளதால் வியாபாரிகள், கிராம மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
10-Feb-2025