மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ஆய்வு
சிவகங்கை; சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிறந்த மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கான விருது வழங்குவதற்காக டாக்டர்கள் குழு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் திண்டுக்கல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் வீரமணி, மதுரை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் கங்கா லட்சுமி, குழந்தைகள் நல பிரிவு பேராசிரியர் குணா உள்ளிட்ட டாக்டர்கள் ஆய்வு செய்தனர். நிலைய மருத்துவர் மகேந்திரன், துணை நிலைய மருத்துவர் முகமது ரபி, தென்றல் உள்ளிட்டோர் இருந்தனர்.