உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு திருவிழா

மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு திருவிழா

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஆக. 7ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா ஆக. 7 காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆடித்தபசு திருவிழா ஆக. 16ல் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ