உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 42 வழித்தடத்தில் மினி பஸ் மார்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம் 

42 வழித்தடத்தில் மினி பஸ் மார்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம் 

சிவகங்கை: மாவட்டத்தில் 42 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் போதிய பஸ் போக்குவரத்து இல்லாத பகுதிகளில் மினி பஸ்களை இயக்க 42 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது தவிர சேவை இல்லாத பகுதிகள் இருந்தால், உரிய ஆவணங்களுடன் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மார்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம். பொது மக்கள் நலன் கருதி 100 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குடும்பங்களை உள்ளடக்கிய குக்கிராமம், கிராமம், குடியிருப்புகளுக்கு இந்த மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மினி பஸ்களை இயக்க விரும்புவோர் படிவத்தில் ரூ.1,600 கட்டணம் செலுத்தி நிலைச்சான்று, முகவரி சான்று, கால அட்டவணை, வழித்தட வரைபட விபரத்துடன் தகுதி வாய்ந்த சாலைக்கான சான்றினை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அல்லது கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைதுறை அனுமதி கடிதத்துடன் கட்டணம் ரூ.140 செலுத்தி, படிவத்தில் ரூ.1,600 கட்டணம் செலுத்தி வழித்தட வரைபட விபரத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மார்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !