உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஏ.டி.எம்.,களை உடைத்து திருட முயற்சி

ஏ.டி.எம்.,களை உடைத்து திருட முயற்சி

காரைக்குடி : காரைக்குடி எஸ்.எம்.எஸ்.,பள்ளி அருகே ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது. இதனை நேற்று முன்தினம் இரவு யாரோ ஒருவர் உடைக்க முயற்சித்துள்ளார். உடைக்க முடியாததால் அங்கிருந்து கிளம்பிய அந்த நபர், கணேசபுரம் அருகே இருந்த அதே வங்கியின் மற்றொரு ஏ.டி.எம்.ஐ., மையத்தில்கதவை உடைக்க முயன்றுள்ளார். கதவை உடைக்க முடியாததால்அங்கிருந்து தப்பியுள்ளார். சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை