உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டிக்குளத்தில் அவதார விழா

கட்டிக்குளத்தில் அவதார விழா

மானாமதுரை: கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதரித்த தினத்தை முன்னிட்டு ஜூலை 20ம் தேதி காலை 7:15 மணி முதல் 10:00 மணிக்குள் கருப்பனேந்தல் மடம் தவச்சாலையில் அமைந்துள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதலாவது ஜீவ ஒடுக்கமான இடத்தில் நடக்கும் அவதார விழாவை முன்னிட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதி பூஜை, நடத்தப்படுகிறது.தொடர்ந்து அபிஷேக, ஆராதனையும் நடைபெற உள்ளது. இரவு 8:00 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார இல்ல பரம்பரை தர்மகர்த்தா பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் சேகர், தண்டாயுதபாணி மற்றும் கட்டிக்குளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ