உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

கீழடி:கீழடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக போதை பழக்கம், குழந்தை திருமணம், ஜாதிய அடையாளம் ஆகியவற்றிற்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் மாதேஷ்வரன் வரவேற்றார். போக்சோ சட்டம் பற்றியும், இளையதலைமுறையினர் போதை பழக்கத்தால் சீரழிவது குறித்தும், அதற்கு எதிராகவும் எஸ்.ஐ., தமிழ்ச்செல்வி அறிவுரை வழங்கினார். விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ஜோதிதிமணி, வளர்மதி, பிரேமலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி