அரசு மருத்துவமனையில் வளைகாப்பு
திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வளைகாப்பு நடத்தி கொண்டாடினர்.திருப்புத்துார் அரசு மருத்துவமனை பணியாளர்கள் இருவர் கர்ப்பிணியாக இருந்தனர். அவர்களுக்கு அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணியாளர்கள் இணைந்து வளைகாப்பு நடத்தினர். தாய்வீடு பிரிவில் பணிபுரியும் தேவகோட்டை ராஜா என்பவரின் மனைவி சுகன்யா28, நமணசமுத்திரம் ஆஸ்வால்ட் மிலன் என்பவரின் மனைவி பிரியா27, ஆகியோருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடமும் தாய் வீடு போல, அதனால் தாயையும், குழந்தையையும் ஆசிர்வதிக்கும் விதமாக விழா நடத்தியதாக மருத்துவர்களும், செவிலியர்களும் தெரிவித்தனர்.