உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநிலத்தில் சிறந்த மாதிரி பள்ளி கீழக்கண்டனி அரசு பள்ளிக்கு விருது 

மாநிலத்தில் சிறந்த மாதிரி பள்ளி கீழக்கண்டனி அரசு பள்ளிக்கு விருது 

சிவகங்கை: தமிழகத்தில் சிறந்த அரசு மாதிரி பள்ளியாக சிவகங்கை அருகே கீழக்கண்டனி அரசு பள்ளி தேர்வானது.அரசு பள்ளிகளில் உயர்கல்விக்கு செல்லும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வியுடன் நீட்' , ஜெ.இ.இ., மற்றும் பிற உயர்கல்வி நுழைவு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரி பள்ளி வீதம் மாநில அளவில் 40 பள்ளிகள் செயல்படுகிறது. இதில் சிறந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் விருது அறிவிக்கப்பட்டன.2023- 2024 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதை, கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி பெற்றது. கேடயம் மற்றும் சான்றினை அரசு சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர் போஸ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றனர். அரசு மாதிரி பள்ளிகள் அளவில் அதிகளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்த வகையில் இப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் குமாருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது, கேடயம், சான்றினை தமிழக அரசு வழங்கியது.மாநில அளவில் முதலிட விருது பெற்ற கீழக்கண்டனி அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை கலெக்டர் ஆஷா அஜித், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி