உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாட்டரசன்கோட்டை தெப்பக்குளத்தில் உடல்

நாட்டரசன்கோட்டை தெப்பக்குளத்தில் உடல்

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவில் முன்பு தெப்பக்குளம் உள்ளது. தற்போது குளத்தில் குறைவான நீர் உள்ளதால் குளத்தின் நடுவே உள்ள கிணறு வெளியே தெரிகிறது. இந்த கிணற்றின் உள்ளே நேற்று மாலை சடலம் ஒன்று மிதப்பதை பார்த்த மக்கள் சிவகங்கை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் அணிந்திருந்த ஆடையில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தன. அதில் சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் மகன் செல்வகணேசன் 50 என இருந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி