| ADDED : ஜூன் 08, 2024 05:34 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் சாலையை ஆக்கிரமித்து செங்கல் தயாரிப்போர் சேதமடைந்த கற்களை மலை போல குவித்து வைத்திருப்பதால எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நேரிடுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருப்புவனத்தில் இருந்து புதுார் வழியாக நான்கு வழிச்சாலை வன்னிகோட்டை, வில்லியரேந்தல், பறையங்குளம், பிரமனுார் கிராமங்களுக்கு தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர். டூவீலர், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் அரசு மாணவியர் விடுதி அருகே மலை போல சேதமடைந்த செங்கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. சாலையை ஒட்டி தொடர்ந்து கொட்டி வந்ததால் சாலையிலும் செங்கற்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. குறுகிய வளைவில் செங்கற்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகின்றன. 10ம் தேதி பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ, மாணவியர்களை அழைத்து வர செல்லும் வாகனங்களும் இப்பாதையில் சென்று வர உள்ளன. எனவே விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் முன் செங்கல் குவியலை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.