உள்ளூர் செய்திகள்

பட்ஜெட் பேட்டி....

புதிய அறிவிப்பு ஒன்றும் இல்லைஆர்.சந்தோஷ்குமார், ஆயில் மில் உரிமையாளர், சிங்கம்புணரி: பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் பல எண்ணெய் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. எண்ணெய் வித்துக்களின் விலைகளில் ஏற்ற இறக்கம், சாகுபடி பாதிப்பு என விவசாயிகளும், ஆயில் மில் உரிமையாளர்களும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.எண்ணெய் ஆலைகள் மட்டுமல்லாது பல்வேறு தொழிற்சாலைகள் சந்திக்கும் நஷ்டத்தை சரிகட்ட அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து இருந்தனர். நம்பிக்கையூட்டும் எந்த அறிவிப்பும் வரவில்லை. தொழில்துறையை ஊக்குவிக்கவோ, புதிய தொழில் தொடங்க இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலோ அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கியுள்ளார்கள். பெரிய அளவில் புதிய அறிவிப்பு எதுவும் இல்லை. 2026 தேர்தலை மனதில் வைத்து ஓரிரு அறிவிப்புகளை இப்போதே வெளியிட்டுள்ளார்களே தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்வி.இளங்கோவன், பொருளியல் துறை தலைவர் (ஓய்வு) திருப்புத்துார்: தமிழ் மொழியின் தொன்மை, கலாசாரத்தை விளக்க,வெளிக்கொணர ஆழ் கடல் அகழாய்வு உள்ளிட்ட பல நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தமிழர்கள் வசிக்கும் வெளி மாநிலங்கள், நாடுகளில் அறிவுசார் வளர்ச்சியாக புத்தக கண்காட்சி நடத்த உள்ளதும் வரவேற்கத்தக்கது. பெண்களின் வளர்ச்சிக்கு இலவச பஸ் பயணம், குடும்பத்தலைவி, கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை, தோழியர் மகளிர் விடுதி திட்டங்கள் உதவும். உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். அரசு ஊழியர்களுக்கு சரண்டர் லீவ் மீண்டும் அனுதியானது ஆறுதலானது. ஆனால் பெரிய தொழில் வளர்ச்சிக்கோ, தொலை நோக்கு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு இல்லை. மது விலக்கு அமலாக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை