உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் மாட்டுவண்டி பந்தயம்

திருப்புத்துாரில் மாட்டுவண்டி பந்தயம்

திருப்புத்தூர்: திருப்புத்துாரில் செல்வவிநாயகர், முனீஸ்வரர்கோயில் வருடாபிேஷகத்தை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 30 வண்டிகள் வரை பங்கேற்றன. சிவகங்கை ரோட்டில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய, சிறிய மாடு என இரு பிரிவாக போட்டிகள் நடந்தது. பெரிய மாட்டிற்கு 8, சிறிய மாட்டிற்கு 6 கி.மீ., துாரத்திற்கு எல்லை நிர்ணயித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அப்போது சிறிய மாட்டு வண்டி ஒன்று கவிழ்ந்ததில், அந்த வண்டியை ஓட்டி வந்தவர் காயமுற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை