உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மகளிர் கல்லுாரிக்கு பஸ்எம்.எல்.ஏ., வலியுறுத்தல்  

அரசு மகளிர் கல்லுாரிக்கு பஸ்எம்.எல்.ஏ., வலியுறுத்தல்  

சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரிக்கு வரும் மாணவிகளின் வசதிக்காக பஸ் ஸ்டாண்டில் இருந்து கல்லுாரி வரை அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித்திடம், செந்தில்நாதன் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் 13 துறைகளின் கீழ் இளங்கலை பட்டம், 7 துறைகளின் கீழ் முதுகலை பட்டப்படிப்புகளில் 2,400 மாணவிகள் படிக்கின்றனர். சிவகங்கையை சுற்றியுள்ள கிராமப்புற மாணவிகளின் வசதிக்காக கல்லுாரி செயல்படுகிறது. திருப்புத்துார், மதகுபட்டி பகுதியில் இருந்து பஸ்சில் வரும் மாணவிகள், கல்லுாரி பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து வந்துவிடுகின்றனர். ஆனால், காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்களில் வரும் மாணவிகள், சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 3 கி.மீ., துாரமுள்ள கல்லுாரிக்கு மஜீத் ரோடு, சனீஸ்வரன் கோயில், கலெக்டர் அலுவலகம் வழியாக நடந்தே செல்கின்றனர். குறிப்பாக இந்த ரோட்டில் கல்லுாரி மாணவிகளை ஏற்றிச்செல்லும் 'ேஷர் ஆட்டோக்கள்' அதிவேகமாக சென்று விபத்துக்களில் சிக்குகின்றன. இதை தவிர்க்கும் நோக்கில் சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து கல்லுாரி நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் கல்லுாரிக்கு கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவிகள் சார்பில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஆஷா அஜித்திடம் வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ