உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி மாநகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி

காரைக்குடி மாநகராட்சியில் கால்வாய் துார்வாரும் பணி

காரைக்குடி : காரைக்குடியில் 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.இக்கண்மாய்கள் விவசாயத்தின் ஆதாரமாக உள்ளன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக காரைக்குடி மாநகராட்சியில் உள்ள வரத்து கால்வாய்களில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் இந்த பணி நடந்து வருகிறது. நகர் முழுவதும் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் நடந்து வருகிறது. பணிகளை மேயர் முத்துத்துரை, கமிஷனர் சித்ரா ஆய்வு செய்தனர். இதில், செயற்பொறியாளர் இசக்கி, உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், கான்ட்ராக்டர் செந்தில், மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி