கவுன்சிலர் மீது வழக்கு
காரைக்குடி: காரைக்குடி 29 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் அமுதா 38. ஆக.28ம் தேதி நடந்த கட்சி உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தின் போது, அமுதாவை, 5 வது வட்ட செயலாளர் தமிழ்க்கொடி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.அமுதா கொடுத்த புகாரின் பேரில் தமிழ்க்கொடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு அமுதா தமிழ்க்கொடி வீட்டிற்கு சென்று அசிங்கமாக பேசி தாக்கி காயம் ஏற்படுத்தியதாக தமிழ்க்கொடி போலீசில் புகார் அளித்ததின் பேரில், கவுன்சிலர் அமுதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.