மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
6 hour(s) ago
பயிற்சி முகாம்
6 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
6 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
6 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
6 hour(s) ago
திருப்புத்தூர் : திருப்புத்தூர் தென்மாபட்டு ரேஷன் கடையில் இருந்த ரேஷன் கார்டுகளை வேறு ஒரு பகுதியில் உள்ள கடைக்கு மாற்றப்பட்டதால், பொருட்கள் வாங்க வெகுதுாரம் நடந்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. தென்மாபட்டு அமுதல் கூட்டுறவு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிய கார்டுதாரர்களை, ஜன., ல் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக பூமாயி அம்மன் கோயில் அருகே உள்ள ரேஷன் கடைக்கு செல்லுமாறு கூறினர். அதற்கு பின் கார்டுகள் அனைத்தையும், அக்கடைக்கு மாற்றி விட்டனர். ஆனால், பழையபடி தென்மாபட்டு ரேஷன் கடையிலேயே பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டும் என கார்டுதாரர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.இதற்காக இ- சேவை மையங்களில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்தனர். சிலர் தங்கள் கடைகளை பழைய கடைக்கு மாற்றிவிட்டனர். கார்டுகளை மாற்ற முடியாதவர்கள் வெகு துாரம் நடந்து சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இது குறித்து திருப்புத்துார், மந்தையாபிள்ளை தெரு, பாண்டி கூறியதாவது: ஆத்தங்கரைப்பட்டியில் புதிய ரேஷன் கடை திறந்த போது, தென்மாபட்டு இரு தெருக்களைச் சேர்ந்த சுமார் 50 பேரின் கார்டுகளை மாற்றினர். அவர்களாகவே கடைகளை மாற்றிவிட்டு, மக்களை அலைக்கழிப்பு செய்கின்றனர். மீண்டும் பழைய தென்மாபட்டு கடைக்கே கார்டுகளை மாற்ற வேண்டும்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago