உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேங்காய் விளைச்சல் பாதிப்பு; விலை உயர்ந்தும் பயனில்லை; பூச்சி தாக்குதலால் கவலையில் விவசாயிகள்

தேங்காய் விளைச்சல் பாதிப்பு; விலை உயர்ந்தும் பயனில்லை; பூச்சி தாக்குதலால் கவலையில் விவசாயிகள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதியில் தென்னை மரங்களில் பூச்சி தாக்குதல் காரணமாக விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது.இத்தாலுகாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, ஒடுவன்பட்டி, காளாப்பூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பில் தென்னை மரங்களை வளர்த்துள்ளனர். சில ஆண்டுகளாக இம்மரங்களில் வெள்ளை ஈக்கள் என்ற பூச்சிகளின் தாக்குதலால் விளைச்சல் பாதித்து வருகிறது. தென்னை ஓலைகளில் அமர்ந்து அதன் பச்சையத்தை அழிக்கும் பூச்சிகளால், மட்டைகள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை குறைந்து காய்ந்து விடுகிறது. ஒரு மரத்திற்கு மூன்றில் ஒரு பங்கு மட்டைகள் காய்ந்து விடுவதால் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. மேலும் தற்போது தேங்காய் விலை உயர்ந்துள்ள நிலையில் அதனால் எந்த பயனும் இல்லை என்கிறார்கள் தேங்காய் விவசாயிகள். பி.ரமேஷ், சிங்கம்புணரி: சில ஆண்டுகளாவே தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்தாண்டு பாதிப்பு கடுமையாக உள்ளது. ஈக்களை ஒழிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லை. வேகமாக அனைத்து மரங்களுக்கும் பரவி வருவதால் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு மரத்திற்கு 40 முதல் 50 தேங்காய் வரை வெட்டப்பட்ட நிலையில் தற்போது 5 முதல் 10 தேங்காய் வரை தான் கிடைக்கிறது. ஆனால் அதே கூலி தான் கொடுக்கவேண்டியுள்ளது. இதனால் தேங்காய் விலை உயர்ந்தும் நஷ்டமே ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !