உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரி ஆண்டு விழா

கல்லுாரி ஆண்டு விழா

திருப்புத்துார்: திருமயம் லேனாவிலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் 23-வது ஆண்டுவிழா நடந்தது.மவுண்ட் சீயோன் கல்விக் குழும தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார். கல்லுாரி இயக்குனர் டாக்டர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் வாழ்த்தினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை விவியன் ரேச்செல் ஜெய்சன் வரவேற்றார்.முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். மரபுக்கவிஞர் முத்தையா ஆளுமை வளர்ச்சி நோக்கில் இளைய தலைமுறைக்கான வெற்றிமொழிகள்' குறித்து பேசினார்.மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அண்ணா பல்கலை தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் திறனை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் இணை பேராசிரியர் குருநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ