உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டி.எஸ்.பி., தாயிடமே வீடு புகுந்து நகை பறிப்பு

டி.எஸ்.பி., தாயிடமே வீடு புகுந்து நகை பறிப்பு

மதுரை: கருமாத்துாரில் பெண் டி.எஸ்.பி., தந்தை வீட்டில் புகுந்த நபர், 5 சவரன் நகையை பறித்து தப்பினார்.சிவகங்கை மாவட்ட டி.எஸ்.பி.,யாக இருப்பவர் பிருந்தா. இவரது தந்தை வீடு, மதுரை மாவட்டம், கருமாத்துார் பசும்பொன் நகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அறையில் பிருந்தா துாங்கிக் கொண்டிருந்தார்.அவரது தாய், தந்தை ஹாலில் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை, 2:30 மணிக்கு வீட்டு கேட்டை திறந்து உள்ளே வந்த நபர், பிருந்தாவின் தாயை மிரட்டி, அவர் அணிந்திருந்த, 5 சவரன் நகையை பறித்துச் சென்றார்.அதேபோல், அருகில் வசிக்கும் ரேஷன் கடை ஊழியர் செந்தில் வீட்டிற்குள் புகுந்த நபர், 3 சவரன் நகை, மூன்று விளக்குகள், 20,000 ரூபாயை திருடிச் சென்றார். செக்கானுாரணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ