உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின் ஊழியர்கள் போராட்டம் 

மின் ஊழியர்கள் போராட்டம் 

சிவகங்கை: மின்வாரியத்தில் காலிபணியிடம் நிரப்ப வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை மின்வாரிய அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடத்தினர்.மாவட்ட துணை தலைவர் சுப்புராம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருணாநிதி துவக்க உரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் மோகன சுந்தரம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் எஸ்.உமாநாத் நிறைவுரை ஆற்றினார். இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் சேதுராமன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் விநாயக மூர்த்தி, மாநில செயலாளர் கோகுல வர்மன் உட்பட மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர். காலிபணியிடம் நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.சம்பள உயர்வு, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர். கோட்ட செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை