உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்கவும்   * விவசாய சங்க கூட்ட தீர்மானம்   

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்கவும்   * விவசாய சங்க கூட்ட தீர்மானம்   

சிவகங்கை, செப்.7-சென்னை - காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என விவசாய சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். மானாமதுரையில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கணேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., மாநில துணை செயலாளர் பெரியசாமி, விவசாய சங்க மாநில பொது செயலாளர் பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ., தங்கமணி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, துணை செயலாளர் மருது, விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் சங்கையா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா பங்கேற்றனர். கூட்டத்தில் சென்னை - காரைக்குடி இடையே ஓடும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். வேலை உறுதி திட்ட சம்பளத்தை ரூ.400 உயர்த்தி தர வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு அவசர பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து மகளிர் கல்லுாரியிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். மானாமதுரை வைகை ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும் என தீர்மானித்தனர். ////


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
செப் 07, 2024 10:26

மானாமதுரையில் விவசாயிகள்... என்ன ஜோக் அடிக்கிறீங்களா ??? வைகையில் மணல் இல்லை. திருப்பாச்சேத்தி, ராஜகம்பிரம் பகுதியில் தண்ணீர் இல்லை. பின்னர் விவசாயி எப்படி வாழமுடியும் பல்லவன் ரயிலை திருச்சியில் இருந்து காரைக்குடி நீட்டிப்பு செய்ய காரைக்குடி அக்கல் போராட்டம் எவ்வளவு என தெறுயுமா ..பல்லவன் நிச்சயம் இதற்கு எல் நீட்டிப்பு ல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை