மேலும் செய்திகள்
வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கு பயிற்சி
09-Aug-2024
சிவகங்கை:மானாமதுரையில் பாசன வேளாண் புத்தாக்க திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குனர் லட்சுமி பிரபா தலைமை வகித்தார்.துணை இயக்குனர் மதுரைசாமி முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் கூடலிங்கம் விரிவாக்க பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.துணை இயக்குனர் (பாசன திட்டம்) செல்வி, உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) காளிமுத்து, வேளாண் அலுவலர்கள் செல்லத்துரை, ஜைனுல் பவுஜியாராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளாண் உதவி இயக்குனர் ரவிசங்கர் உட்பட வேளாண் உதவி இயக்குனர், வேளாண் அலுவலர், துணை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் பங்கேற்றனர்.
09-Aug-2024