உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளுக்கு வீ்டு

பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளுக்கு வீ்டு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீடின்றி தவித்த குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர்கள் சேர்ந்து வீடு கட்டி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரைச் சேர்ந்தவர் சுப்பையா. கூலி வேலை செய்து வந்த இவர் உடல்நிலை சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவருக்கு, முன்பே இவரது மனைவி ரேவதியும் உயிரிழந்தார். இவர்களுக்கு தர்ஷினி 16, தாரணி 14 என்ற மகள்களும், பாலமுருகன் என்ற 14 மகனும் உள்ளனர். அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வந்த அத்தை பாதுகாப்பில் குழந்தைகள் படித்து வந்தனர்.இவர்கள் குடியிருந்த வீடும் சில மாதங்களுக்கு முன்பு மழையால் இடிந்து விழுந்தது. குழந்தைகள் தங்குவதற்கு வீடின்றி தவித்தனர்.சமூக வலைதளங்களில் இச்செய்தி பரவியது. இதனை அறிந்த காரைக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு மற்றும் நம்ம கோவிலுார் நண்பர்கள் சேர்ந்து ஆதரவின்றி தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். சமூக ஆர்வலர்கள் தங்களின் நிதி பங்களிப்போடும், பிறரின் பங்களிப்போடும் தற்போது ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் குயில் கூடு என்ற வீட்டை கட்டிக் கொடுத்துள்ளனர். புதுமனை புகுவிழாவில் டி.எஸ்.பி., பார்த்திபன், டாக்டர் குமரேசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் வீட்டை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ