உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இலவச தொழிற்பயிற்சி முகாம்

இலவச தொழிற்பயிற்சி முகாம்

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் சார்பில் மார்ச்சில் நடைபெறும் இலவச பயிற்சி முகாமில் பொதுமக்கள் பங்கேற்கலாம். ஒரு நாள் பயிற்சியாக மார்ச் 18 ல் மண்புழு உரம் தயாரித்தல், மண்புழு பராமரித்தல் பயிற்சி, மார்ச் 19ல் சிப்பி மற்றும் பால் காளான் வளர்த்தல், சந்தைப்படுத்துதல் பயிற்சி, மார்ச் 25ல் பினாயில், சோப்பு ஆயில், சோப்பு பவுடர் தயாரித்தல்ஆகிய பயிற்சி அளிக்கப்படும். இரண்டு வார அரைநாள் பயிற்சியாக மார்ச் 10ல் அழகுக்கலை சிறப்பு செய்முறை பயிற்சி துவங்குகிறது. இப்பயிற்சி பெண்களுக்கு மட்டும். பயிற்சி பெற விரும்புவர்கள் 94885 75716; 95784 99665 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை