உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளி மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி

அரசு பள்ளி மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள கமலை கிராமத்தைசேர்ந்த உடையப்பன் மகன் ரவி 18. பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நீட் தேர்வில் 597 மதிப்பெண் பெற்றுள்ளார். இதன் மூலம் மாணவர் ரவி அரசு பள்ளிக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர் ரவி கூறுகையில், எனது தாய்க்கு கேன்சர் இருப்பது கூட தெரியாமல் அவரை பறிகொடுத்தேன். டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்க ஆரம்பித்தேன். பள்ளி ஆசிரியர்கள் எனக்கு சிறப்பு பயிற்சி அளித்ததோடு கோச்சிங் சென்டரில் சேர்த்து என்னை படிக்க வைத்தனர். எனது கனவை நனவாக்கியது எனது ஆசிரியர்கள் தான். தற்போது, அரசு பள்ளி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். நீட் தேர்வால் மட்டுமே இது சாத்தியமானது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை