மேலும் செய்திகள்
வளர் இளம் பருவ விழிப்புணர்வு
09-Sep-2024
திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கல்விக்குழும தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமை வகித்தார். கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன் வரவேற்றார். பெங்களூரு ஓலா எலக்ட்ரிக் நிறுவன இயக்குனர் என்.சோமசுந்தரம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் ப.பாலமுருகன் பேசினர்.190 இளநிலை பொறியாளர்களுக்கும், 15 முதுநிலைப் பொறியாளர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.ஓலா நிறுவன முதன்மை மேலாளர் எஸ்.பன்னீர் செல்வம், கல்லுாரி முதன்மையர்கள், துறைத்தலைவர்கள்,பேராசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். எஸ்.ராபின்சன் நன்றி கூறினார்.
09-Sep-2024