உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சிவகங்கை: உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை, பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சேதுசெல்வம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும். உயர்கல்வி தகுதிக்கு இரண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும்.ஈட்டிய விடுப்பை அமல்படுத்த வேண்டும். உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, அங்கு பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்கவேண்டும். ஒவ்வொரு உயர், மேல்நிலை பள்ளிக்கும் தலா 7 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இக்கோரிக்கை உட்பட 14 அம்ச கோரிக்கையை நிறைவேற்றித்தரக்கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை