மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
16 hour(s) ago
பயிற்சி முகாம்
16 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
16 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
16 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
16 hour(s) ago
மதுரை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அரசு சோமன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை நகராட்சி பகுதி குப்பைகளை காரைக்குடி செஞ்சை பகுதியில் குவிக்கின்றனர். அருகில் ஆழ்துளை கிணறு உள்ளது. அதிலிருந்து காரைக்குடி வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாசடைந்த ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: பெங்களூருவிலுள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தென்மண்டல அதிகாரி குப்பைக் கிடங்கு, ஆழ்துளை கிணறு மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து செப்.,20 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago