மேலும் செய்திகள்
அரசு பணியாளர் சங்கம் மனித சங்கிலி போராட்டம்
04-Mar-2025
சிவகங்கை: பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்குதல் உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் கேஆர்.,விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாயாண்டி வரவேற்றார். மாவட்ட செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், ஜீவிதா, ரமேஷ் கண்ணன், கோபாலகிருஷ்ணன், சங்கையா, தண்டபாணி, வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் கவுரி நன்றி கூறினார். மாநில பொது செயலாளர் கேஆர்.,விஸ்வநாதன் கூறியதாவது: மார்ச் 14ல் தமிழக பட்ஜெட்டில் எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றி தராவிடில், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.
04-Mar-2025