உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடும்பத்தகராறில் கணவன் கொலை மனைவி, மகள்கள், மருமகன் கைது

குடும்பத்தகராறில் கணவன் கொலை மனைவி, மகள்கள், மருமகன் கைது

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நவத்தாவு கிராமத்தைச் சேர்ந்த அழகர் மகன் கருப்புசாமி, 50. இவரது மனைவி பஞ்சவர்ணம், 42. இவர்களுக்கு கலைராணி, 23, கண்மணி, 21 என்ற இரண்டு மகள்களும், மகனும் உள்ளனர். மனைவி நடத்தையில் கருப்புசாமி சந்தேகப்பட்டதால் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு நடந்தது. இதையடுத்து கருப்புசாமி மனைவி மற்றும் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தார்.சில நாட்களுக்கு முன் மகள் கலைராணி திருமணத்திற்காக மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இப்பிரச்னையில் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த பஞ்சவர்ணம், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் கணவன் கருப்புசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். கொலைக்கு உடந்தையாக இருந்த மகள் கலைராணி, அவரது கணவர் செல்வா, 24 மற்றும் மற்றொரு மகள் கண்மணி ஆகியோரை, மானாமதுரை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ