உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்; டூவீலர், வெள்ளி சாமான்கள் திருட்டு

மாவட்டத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்; டூவீலர், வெள்ளி சாமான்கள் திருட்டு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி சாமான்கள், டூவீலர் திருட்டு நடந்துள்ளதால், அதை கட்டுபடுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்குடி லட்சுமி நகர் மதியழகன் மகன் அஜய்கார்த்திக் 23. இவர் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு காரைக்குடி சாமியார்தோட்டம் பகுதியில் உள்ள ரோஸ்மில்க் கடையின் அருகே தனது ரூ.80 ஆயிரம் மதிப்பிலான டூவீலரை நிறுத்தியுள்ளார். மர்ம நபர்கள் அந்த வண்டியை திருடி சென்றனர். அழகப்பாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். மானாமதுரை சிப்காட் ஆறுமுகம் மகன் மகாலிங்கம் 57. இவர் மானாமதுரை சந்தையில் டூவீலரை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, டூவீலர் திருடு போனது தெரிந்தது. திருப்புவனம் அருகே டி.பழையூர் அம்பிகா 40. இவர் தனது டூவீலரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

3 கிலோ வெள்ளி திருட்டு

திருக்கோஷ்டியூர் அருகே பி. கருங்குளம் நாச்சியப்பன் 73. சென்னையில் வசிக்கிறார். கருங்குளத்தில் உள்ள பூர்வீக வீட்டை சுத்தம் செய்ய செல்விஎன்ற பெண்ணை நியமித்தார். நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு அவர் வீட்டை சுத்தம் செய்ய சென்றபோது, வீட்டின் வெளிப்புற கேட் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். நாச்சியப்பன் வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 3 கிலோ வெள்ளி சாமான்கள் திருடி போனதை அறிந்தார். திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர். காரைக்குடி சுப்பிரமணியபுரம் மனோகரன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை உடைத்து வெள்ளி சாமான்களை திருடி சென்றனர். வீடுகளில் வெள்ளி சாமான்கள், டூவீலர் திருட்டால் மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி, திருட்டு நடக்காத வகையில் கண்காணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை