உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் உழவு பணி தீவிரம்

இளையான்குடியில் உழவு பணி தீவிரம்

இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் உழவுப் பணியை துவக்கியுள்ளனர்.இளையான்குடி,சாலைக்கிராமம்,சூராணம், முனைவென்றி,தாயமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் பணிகளை துவக்கியுள்ளனர். இந்த வருடம் ஆடியில் பெய்த மழையைத் தொடர்ந்து தற்போது வயல்கள் ஈரமாக உள்ளதால் டிராக்டர்கள் மூலம் உழவு பணிகளை துவக்கியுள்ளனர்.இளையான்குடி சுற்று வட்டார விவசாயிகள் கூறியதாவது: இளையான்குடி மேற்கு வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் குண்டு மிளகாய் விவசாயம் செய்து வரும் நிலையில் தற்போது பெய்த மழையைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று தாயமங்கலம், தடியமங்கலம், முனைவென்றி, கீழநெட்டூர்,ஆலம்பச்சேரி மேலநெட்டூர், குமாரக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உழவு பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை