உள்ளூர் செய்திகள்

கபடி போட்டி

திருக்கோஷ்டியூர்: பட்டமங்கலத்தில் சீனியர் வீரர்களுக்கான கபடிப்போட்டி நடத்தப்பட்டது. சிந்தாமணி செவன் எஸ். அணி சார்பில் விளையாடிய புதுக்கோட்டை தெற்கு பிச்சாந்துப்பட்டி சிவகணேஷ்54 என்ற வீரர் வலது கையில் காயமடைந்து வெளியேறினார். திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இறந்தது தெரிந்தது.அவரது உடல் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டமங்கலம் வடக்குத் தெரு சூரியன் மகன் கார்த்திகேயன் கூறுகையில் வடக்குத் தெரு ஸ்ரீகரியமலை சாத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு கபடிப்போட்டி ஏதும் நடத்தப்படவில்லை' என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !