உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கபாடி வீரர் உயிரிழப்பு

கபாடி வீரர் உயிரிழப்பு

திருக்கோஷ்டியூர், : திருப்புத்துார் அருகே பட்டமங்கலத்தில் நடந்த கபாடி போட்டியில் விளையாடிய வீரர் சிவகணேஷ் 54, காயமுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பட்டமங்கலம் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மூத்தோருக்கான கபாடி போட்டி நடந்தது. நேற்று மாலை நடந்த போட்டியில் பட்டமங்கலம் அணியுடன், சிந்தாமணி செவன்ஸ் அணி மோதியது. சிந்தாமணி செவன்ஸ் அணி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு பிச்சாந்துபட்டியை சேர்ந்த கபாடி வீரர் சிவகணேஷ் 54, பாடி சென்றார். அப்போது கீழே விழுந்ததில் வலது கையில் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ