உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி அருங்காட்சியகம் செப்.,11ல் மூடப்படும்

கீழடி அருங்காட்சியகம் செப்.,11ல் மூடப்படும்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கீழடி தொல்லியல் அருங்காட்சியகம் செப்., 11 அன்று திறக்கப்படாது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு நாள் செப்., 11 ல் நடக்கிறது. இதற்காக மதுரை -- ராமேஸ்வரம் ரோடு வழியாக அவரது நினைவு இல்லத்திற்கு வாகனங்களில் சென்று வருவார்கள். இதன் காரணமாக அந்த ரோடு பகுதியில் உள்ள கீழடி தொல்லியல் அருங்காட்சியகம் மூடப்படும். மேலும் அன்று சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுகிறது. இதற்கு பதிலாக செப்., 21 அன்று பள்ளிகள் செயல்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ