உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டவராயன்பட்டியில் மார்ச் 10ல் கும்பாபிஷேகம்; யாக சாலை பூஜை துவக்கம்

கண்டவராயன்பட்டியில் மார்ச் 10ல் கும்பாபிஷேகம்; யாக சாலை பூஜை துவக்கம்

கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டி தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் துவங்கின. மார்ச் 10ல் கும்பாபிேஷகம் நடக்கிறது.இக்கோயிலில் மூலவர் குடகுமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறையில் குன்றின் மேல் தண்டாயுதபாணியாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு பெற்றது. விமானங்கள், ராஜகோபுரம், மண்டபங்களுக்கு திருப்பணி நடந்தது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தன பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.இன்று காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி மாலை 6:30 மணிக்கு முதற்காலயாக பூஜை நடைபெறும்.மார்ச் 9ல் காலை 9:00 மணிக்கு இரண்டாம் காலம், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் நடைபெறும். மார்ச் 10 காலை 7:00 மணிக்கு நான்காம் காலயாக பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 9:50 மணிக்கு மேல் 10:10 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு மகா அபிேஷகம், தீபாராதனை நடைபெறும். இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை