உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேலப்பிடாவூர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

மேலப்பிடாவூர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

மானாமதுரை: மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் பூர்ணா தேவி,புஷ்கலா தேவி சமேத வெள்ளாரப்பன் (எ)முத்தையா அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் மற்றும் மராமத்து பணி முடிவடைந்ததை தொடர்ந்து நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விக்னேஸ்வர பூஜை,தீபாராதனை மற்றும் முதலாம் கால பூஜைகள் ஆரம்பமாகின. இன்று 7ம் தேதி விசேஷ சாந்தி மற்றும் 2மற்றும் 3ம் கால யாக சாலை பூஜைகள், நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை 8ம் தேதி காலை 5:00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் 4ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று காலை 7:00 மணி முதல் 8:30 மணிக்குள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க உள்ளனர். ஏற்பாடுகளை மேலப்பிடாவூர், குலக்கட்டப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி