மேலும் செய்திகள்
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்
19-Aug-2024
சிவகங்கை, : இளையான்குடி வட்டாரத்தில் நாளை (செப்., 18) உங்களை தேடி உங்கள்ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் இளையான்குடி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு செய்வார்கள். அன்று மாலை 4:30 முதல் 6:00 மணி வரை இளையான்குடி சிவன் கோயில் அருகே உள்ள எம்.எம்., திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, துறை வாரியான அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்து பயன்பெற வேண்டும்.
19-Aug-2024