உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணிகள்

அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணிகள்

காரைக்குடி : காரைக்குடி அரசு மருத்துவமனையில் இரவுப் பணியில் பிரசவ நேரத்தில் டாக்டர் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு கர்ப்பிணியை அனுப்பி வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது.காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு காரைக்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி பெண்கள் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். மாதந்தோறும் 300 முதல் 400 பிரசவம் நடக்கிறது. இந்த மருத்துவமனையில் பல வருடங்களாக போதிய மருத்துவர்கள் இல்லை.நேற்று முன்தினம் இரவு மகப்பேறு மருத்துவமனையில் பணியில் மருத்துவர் இல்லை. செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இரு பெண்களுக்கு இரவு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. டாக்டர்கள் இல்லாததால் உடனடியாக அவ்விரு பெண்களையும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு செல்ல ஊழியர்கள் அறிவுறுத்தினர். சிவகங்கை செல்வதற்கு தாமதம் ஆகும் என்பதால் தவித்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது.தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில்: பணிக்கு வரவேண்டிய மகப்பேறு மருத்துவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வர முடியவில்லை. இதனால் பிரசவம் பார்ப்பது சிரமம். கர்ப்பிணிகளின் பாதுகாப்பு கருதியே அவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு வலியுறுத்தினோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !