உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செயல்படாத ஏ.டி.எம்., வாடிக்கையாளர்கள் அதிருப்தி

செயல்படாத ஏ.டி.எம்., வாடிக்கையாளர்கள் அதிருப்தி

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் நீண்ட நாட்களாக செயல்படாத ஏ.டி.எம்., மையத்தால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தளக்காவூர் ஊராட்சிக்குட்பட்ட மானகிரியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியுடன் ஏ.டி.எம்., செயல்படுகிறது. மையத்துடன் வங்கியும் செயல்படுவதால் மானகிரி தளக்காவூர் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர், இந்த வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளனர். இந்த ஏ.டி.எம்., பல நாட்களாக செயல்படவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வங்கி அதிகாரிகள் கூறுகையில், வங்கியில் டெபாசிட் வசதியுடன் கூடிய ஏ.டி.எம்., மிஷின் உள்ளது. டெபாசிட் செய்ய வரும் வாடிக்கையாளர்கள் சிலர் அதில் வங்கி அட்டை அல்லது மாறுதலாக ரூ.50, 10 நோட்டுக்களை வைத்து விடுகின்றனர். இதனால் மிஷினில் கோளாறு ஏற்பட்டு நின்று விடுகிறது. சனி, ஞாயிறு வங்கி விடுமுறை என்பதால் வேலை நாட்களில் மட்டுமே அதனை சரி செய்ய முடியும். மற்ற நாட்களில் ஏ.டி.எம்., முறையாக செயல்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி