உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தடுப்பணை அருகே கருவேல மரங்கள்

தடுப்பணை அருகே கருவேல மரங்கள்

திருப்புவனம்,: திருப்புவனம் வைகை ஆற்றில் தடுப்பணை அருகே வளர்ந்து வரும் கருவேல மரங்களால் பத்து கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடையும் அபாயம் உள்ளது. திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், படமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 36 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகின்றன. கோடை காலங்களில் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை தவிர்க்க அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணறு அருகே நீர்மட்டத்தை உயர்த்த பத்து கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது.திருப்புவனம் ஆண்கள் பள்ளி அருகே கட்டப்பட்ட இந்த தடுப்பணையால் ஓரளவிற்கு கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் தடுப்பணை அருகே கருவேல மரங்கள் வளர்ந்து காடாக காட்சியளிக்கிறது. கருவேல மரங்களின் வேர்ப்பகுதி தடுப்பணை வரை நீண்டு வருவதால் தடுப்பணையின் முன்புறம் உள்ள கற்கள் பெயர்ந்து வருகின்றன.கருவேல மரங்கள் நாளுக்கு நாள் அடர்ந்து வளர்வதால் தடுப்பணையும் சேதமடைய வாய்ப்புண்டு.தடுப்பணை கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை எந்த வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ