உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடி வெள்ளிக்கு மடப்புரம் பத்ரகாளி கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

ஆடி வெள்ளிக்கு மடப்புரம் பத்ரகாளி கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாதம் பிறக்க உள்ளதையடுத்து பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய முன்னேற்பாடுகளில் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இக்கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.ஆடி மாதம் மற்றும் வெள்ளிதோறும் நடக்கும் சிறப்பு பூஜைகளை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைத்துள்ளனர்.தடுப்புகளினுள் தரிசனத்திற்காக காத்து நிற்கும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் வரிசையில் நிற்காமல் உடனுக்குடன் தரிசனம் செய்ய தனி வரிசை உள்ளது. ஆடி மாதம் வரும் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்த வசதியாக ஆங்காங்கே தற்காலிக உண்டியலும் அமைத்துள்ளனர். ஆடி வெள்ளிக்கு கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களின் வாகனங்கள் வடகரை விலக்கு அருகிலேயே நிறுத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். செயல் அலுவலர் ஞானசேகரன் தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை