| ADDED : ஜூலை 02, 2024 10:03 PM
இளையான்குடி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில் நடந்தது.செயலாளர் அப்துல் ஜப்பார்,பொருளாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் செல்லப்பாண்டி மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலைக்கிராமத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியமாகவும், சிவகங்கை மற்றும் காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மதகுபட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய, மாவட்ட, மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி நன்றி கூறினார்.