இயங்காத லிப்ட்களால் நோயாளிகள் சிரமம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பல மாதங்களாக பழுதான லிப்டை சரிசெய்ய வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். தரைத்தளம் , 2ம் தளம், 3ம் தளத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் நோயாளிகள் டாக்டர்கள் சென்று வர 7 லிப்ட்கள் உள்ளன. இதில் ஒரு சில லிப்ட் மட்டுமே இயங்குகின்றன.தரைதளத்தில் இருந்து இரண்டாம், 3ம் தளத்திற்கு படி வழியாக செல்லவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக எலும்பு முறிவு வார்டு, மேம்படுத்திய தீவிர சிகிச்சைக்கு அருகாமையில் உள்ள லிப்ட் காட்சி பொருளாக உள்ளது. சில லிப்ட்களில் கதவு சேதமடைந்துள்ளது. இயங்காத லிப்ட்களை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.