உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெருங்காட்டு கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

பெருங்காட்டு கருப்பர் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சுக்காம்பட்டி ரோட்டில் அமைந்துஉள்ள பெருங்காட்டு கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.18ம் தேதி விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால பூஜை நடந்தது. 9:15 மணிக்கு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில் பங்கேற்றனர். சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் சிவாச்சாரியார் சேவற்கொடியோன் யாக, கும்பாபிஷேக பூஜைகளை நடத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி