அலைபேசி டவர் மாயம்
காரைக்குடி: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் தஜ்மல்கான் 41. இவர் அலைபேசி டவர் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துதல், ஒப்பந்த பத்திரம் பதிவு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் பணியாற்றும் நிறுவனத்தின் மூலம், காரைக்குடி 100 அடி ரோடு முடியரசன் சாலையில் உள்ள ஒரு இடத்தில் டவர் அமைக்கப்பட்டிருந்தது. 2017ல் இருந்து, அலைபேசி டவர் செயலிழந்து கிடந்ததால் டவர் இருந்த இடத்தை பார்த்த போது டவர் காணாமல் போயிருந்தது. தஜ்மல்கான் காரைக்குடி குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.