| ADDED : ஜூலை 15, 2024 04:33 AM
மாணவிகள் தற்கொலைசிவகங்கை: சிவகங்கை அரசு கல்லுாரியில் படித்த இரு மாணவிகள் தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இங்குள்ள அரசு கல்லுாரியில் சிவகங்கை, தமறாக்கியை சேர்ந்த மாணவிகள் இருவர் படித்தனர். ஒரு மாணவி செமஸ்டர் தேர்வு முடிவில் இரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.இந்தமன வருத்தத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மற்றொரு மாணவி அடிக்கடி அலைபேசி பார்த்து கொண்டிருப்பதை, பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் அதிருப்தியான மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.கல்லுாரி மாணவர் பலிகீழடி : சிலைமான் அருகே நெடுங்குளம் சரவணன் மகன் பிரதீஷ் 21. இவர் அரசனுாரில் உள்ள தனியார் சட்டக்கல்லுாரியில் படித்தார். நேற்று நண்பர்களுடன் காஞ்சிரங்குளத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றிற்குள் குதித்தபோது கல்லில் தலை அடிபட்டு உயிரிழந்தார்.குவாரி பள்ளத்தில் உடல் மீட்பு திருப்புவனம்: திருப்புவனம் அருகே மணல் அள்ளிய பள்ளத்தில் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டுள்ளனர். கலியாந்தூர் - வெள்ளக்கரை சாலையில் பயன்பாடில்லா தரிசு நிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சவடு மண் அள்ளியதால், அங்கு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளங்களை சுற்றி கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. நேற்று காலை அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 35 வயதுள்ள அவரது உடலை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.